யுவராஜ் மனைவி உருக்கம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      விளையாட்டு
Yuvraj wife earnestly 2019 06 11

இந்திய அணியின் உலகக் கோப்பை அணியின் அறிவிப்பு வெளியாகியபோது, யுவராஜ் சிங்கை உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்காலம் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். நேற்று முன்தினம் அவர் தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக, புற்றுநோய் பாதிப்பால் யுவராஜ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகினார். அதன்பின்னர் 2016ஆம் ஆஸ்திரேயாவிற்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார்.

அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள யுவராஜ் சிங் மனைவி ஹஷெல் கீச், “ஒரு மனைவியாக அவரிடம் கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன். யுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ஆம் யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பினர். அதைக்கண்ட யுவராஜ் அழுதார். அவரது உணர்ச்சிகளை அப்போது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து