முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் கார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 24 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

சென்னை : ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஹோண்டா எலக்ட்ரிக் எனும் எஸ்.யூ.வி. காரை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொழில் துறை சார்பில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் தனது நான்காவது விரிவாக்கத் திட்டத்திற்காக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யவும், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யவும் 24.1.2019 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஹுண்டாய்  மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  அதன் அடிப்படையில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஹோண்டா எலக்ட்ரிக் எனும் எஸ்.யூ.வி. காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவ்வாகனத்தில் பயணம் அவர் செய்தார். இந்த எஸ்.யூ.வி. கார் உயர் தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், 57 நிமிடங்களில் 80 விழுக்காடு மின்னேற்றம் செய்யும் வசதி கொண்ட மின்கலன் பொருத்தப்பட்டு, ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் செய்வதன் மூலம் 452 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில் துறை சிறப்புச் செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன், தொழில் திட்டங்களுக்கான வழிகாட்டி அலுவலர்கள் மற்றும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கிம் மற்றும்  அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து