முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர போராட்ட வீரர் திருமங்கலம் மாயாண்டி சேர்வையின் 27வது ஆண்டு நினைவு தினம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர்கள் தூவி மரியாதை:

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயருக்கு சவால் விட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணிவுடன் தேசியக் கொடியேற்றிய திருமங்கலம் தீரர் மாயாண்டி சேர்வையின் 27வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு திருமங்கலம் தெற்குத்தெரு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
தாய் திருநாட்டின் விடுதலைக்காக சுதந்திர போராட்டங்கள் தீவிரமடைந்த காலத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை என்பவர் குறிப்பிட்ட தேதியில்,குறிப்பிட்ட நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடியினை ஏற்றிட இருப்பதாக 10நாட்களுக்கு முன்னதாகவே ஆங்கிலேய சிப்பாய்களுக்கு சவால் விடுத்துள்ளார்.அன்றைய கால கட்டத்தில் மாயாண்டி சேர்வை பல்வேறு அதிரடி திட்டங்கள் மூலம் ஆங்கிலேயரை திணறடித்து வந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் அவரை தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்திட சிப்பாய்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆனால் ஆங்கிலேயரின் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து கொண்ட மாயாண்டி சேர்வை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே உண்பதற்கு நிலக்கடலையும்,குடிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வடக்கு கோபுரத்தில் ஏறி அதன் உச்சியில் உள்ள சிறிய அறை போன்ற இடத்தில் பதுங்கிக் கொண்டார்.கொண்டு வந்த நிலக்கடலையும்,தண்ணீரும் சில நாட்களில் தீர்ந்து போகவே தனது சிறுநீரை பிடித்து தானே குடித்து குறிப்பிட்ட நாளும்,நேரமும் வரும் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டு கோபுரத்தின் உச்சியில் தங்கியுள்ளார்.
இதனிடையே மாயாண்டி சேர்வையில் திட்டத்தை அறிந்திடாமல் திணறிய ஆங்கிலேய சிப்பாய்கள் சோர்ந்து விட்ட நிலையில் குறிப்பிட்ட நாளும் நேரமும் வந்தவுடன் வந்தே மாதரம்-பாரத் மாத கீ ஜே என்ற பலத்த குரலுடன் கோபுரத்தை விட்டு வெளியேறிய மாயாண்டி சேர்வை தான் சவால் விட்டபடி கோபுரத்தின் உச்சியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவிட்டு ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணை தூவிட்டு தப்பிச் சென்று விட்டார்.இந்த நிகழ்வு ஆங்கிலேயரது வரலாற்றில் கரும் புள்ளியாக மாறிவிட்டது.இத்தகைய சிறப்பு பெற்ற மாயாண்டி சேர்வை கடைசி காலத்தில் திருமங்கலம் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்து கடந்த 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து அவரது பூத உடல் திருமங்கலம் தெற்குத் தெரு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேய சிப்பாய்களுக்கு முன்கூட்டியே சவால் விட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோபுரத்தின் உச்சியில் குறிப்பிட்ட தினத்தில் துணிவுடன் தேசியக் கொடியேற்றிய திருமங்கலம் தீரர் மாயாண்டி சேர்வையின் 27வது நினைவு தினம் திருமங்கலத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.விருதுநகர் சாலை தெற்குத் தெரு பகுதியிலுள்ள மாயாண்டி சேர்வையின் நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு தீரர் மாயாண்டி சேர்வையின் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினார்.பின்னர் மாயாண்டி சேர்வையின் தீரச் செயல்கள் குறித்து அவரது உறவினர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார்.இதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் தீரரின் நினைவிடத்தின் மாலைகளை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,கட்சி நிர்வாகிகள் சுகுமார்,சாமிநாதன்,அன்னக்கொடி,வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து