முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை கிடையாது: ஈரான்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியது எனக் கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படம் ஒன்றையும் அமெரிக்கா வெளியிட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். எனினும், அமெரிக்கா தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறிய ஈரான் இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. சவுதி அரேபிய எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஆனால் நாங்கள் அதற்கு பலியாக மாட்டோம். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை. இனி அவர்களுடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து