முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் - மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து ஞாயிற்று கிழமை தோறும் வானொலியில் மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதன்படி, நேற்று மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 

தேர்வு அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும். தேர்வு குறித்த தங்களது அனுபவங்களை மாணவர்கள் எனக்கு எழுதலாம். இதன் அடிப்படையில், எக்சாம் வாரியர் புத்தகத்தின் அடுத்த பதிப்பை எழுதுவேன். இந்த புத்தகம் பல மாணவர்களுக்கு உதவியது. இந்த நாட்டின் பிரதமரின் கடுமையான உழைப்பை பொது மக்கள் பார்த்துள்ளனர். அதனை பற்றி விவாதித்துள்ளீர்கள். நானும் உங்களை போன்று சாதாரண மனிதன் தான். உங்களை பாதிப்பது என்னையும் பாதிக்கிறது. உங்களில் இருந்து தான் நான் வந்துள்ளேன். நமது முன்னோர்களின் அறிவுத்திறன் அனைவராலும் பாராட்டக் கூடியது. மனிதநேயத்துடன் செயல்படும் எந்த நபராலும், யாரின் மனதையும் வெல்ல முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

புகையிலை பொருட்களுக்கு அடிமையாவது உடல்நலத்திற்கு தீங்கானது. இதில் இருந்து மீள்வது கடினம். இதனை, பயன்படுத்துவதை தவிர்த்து உடல் நலத்தை பேண வேண்டும். புகையிலை பயன்படுத்துவதால், ரத்த அழுத்தம், சர்க்கரை, புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், இ-சிகரெட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தாது என பலர் நம்புகின்றனர். ஆனால், சுவாச பிரச்னை, இதய கோளாறு, நரம்பியல் கோளாறு, மரபியல் ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பொது மக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், மத்திய அரசு தடை செய்துள்ளது. அனைவரும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும். பிட் இந்தியா என்பது உடற்பயிற்சி கூடத்திற்கு மட்டும் செல்வது கிடையாது. பிட் மற்றும் ஆரோக்கிய இந்தியாவை உருவாக்க அனைவரும் உழைப்போம். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்போம். பிளாஸ்டிக்கை ஒழிக்க 130 கோடி மக்களும் உறுதி ஏற்றுள்ளனர் என்று பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து