முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் மாத மழை 102 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகம்- இந்திய வானிலை மையம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, : இந்தியாவில் செப்டம்பர் மழை 102 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. 

தீவிரமான மற்றும் இடைவிடாத பருவமழை இந்த மாதத்தில் (செப்டம்பர்) 102 ஆண்டுகளில் கண்டிராதவகையில் அதிகம் பெய்து உள்ளது. ஜூன்-செப்டம்பர் பருவத்தின் மழை இயல்பை விட 9% ஆக அதிகம் பெய்து உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் அகில இந்திய சராசரி மழை 247.1 மிமீ ஆகும். இது இயல்பை விட 48 சதவீதம் அதிகம் ஆகும். 1901 முதல் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மழை பதிவுகளில் மூன்றாவது அதிகபட்சம் இதுவாகும்.

இந்த மாதத்தின் மழைப்பொழிவு 1983ன் எண்ணிக்கையை (255.8 மிமீ) கடக்கும். ஏனெனில் குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மிக அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அது நடந்தால், இந்த நூற்றாண்டில் இந்தியாவில் அதிக மழை பெய்த செப்டம்பர் மாதம் இதுவாகும். இது 1917க்கு (285.6 மிமீ) பின்னால், 1901 முதல் இந்த மாதத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் 33% மழை பற்றாக்குறையுடன் இந்த ஆண்டின் பருவமழை, தாமதமாக தொடங்கியது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த நான்கு மாத காலப்பகுதியில் அதிக மழையைப் பதிவு செய்து உள்ளது. அகில இந்திய சராசரி பருவகால மழை 956.1 மி.மீ., ஞாயிற்றுக்கிழமை வரை 877 மி.மீ. பெய்து உள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக இடைவெளி இல்லாமல் பருவமழை நாடு முழுவதும் தீவிரமாக பெய்து உள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒட்டுமொத்த மழைப்பொழிவு 31 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த மழை பெய்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து