முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27-வது திருமண நாளை உற்சாகமாக கொண்டாடிய ஒபாமா தம்பதி

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஒபாமா ஆகியோர் தங்களது 27-ஆவது திருமண நாளை கொண்டாடினர்.

இவர்களுக்கு கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் 1992-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி சிகாகோவில் திருமணம் நடைபெற்றது. ஒபாமா தம்பதிக்கு மலியா ஆன் மற்றும் சாஷா என இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஒபாமா தம்பதியர் தங்களுக்கே உரிய பாணியில் 27-வது திருமண நாளை கொண்டாடினர். தங்களை இணைத்த அந்த அதிசயத் தருணத்தை இன்று வரை உணர்வதாக தெரிவித்துள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்பெற்ற பீடில்ஸ் பாடல் வரிகளைப் பகிர்ந்த பாரக் ஒபாமா, 27 வருட திருமண வாழ்வில் இணைந்து பயணித்ததற்கு தனது மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 27 வருடங்களுக்கு முன்பு சவால் நிறைந்த வாழ்க்கையை எனக்கு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பாரக் நிறைவேற்றியுள்ளார். எங்கள் வாழ்வில் அடுத்து என்ன? எனும் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என மிட்செலும் தனபங்குக்கு காதலை வெளிபடுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து