முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியில் நடமாடினால் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின் சுயதனிமைப்படுத்துதலை தவிர்க்கும் நபர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை  வரும் 31- ந்தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் வருகிற 31- ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை முழுவதும் நிறுத்தப்படுகிறது. எனினும், சரக்கு ரெயில் சேவை வழக்கம் போல் செயல்படும் என்றும் இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் நபர்களாலேயே ஏற்படுகிறது என்றும் அவர்களால் மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவுகிறது எனவும் கூறப்படுகிறது.

நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு பலியான 2 - வது நபரான டெல்லியை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிக்கு வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய அவரது மகனாலேயே ஏற்பட்டது. அவரது மகன் சுய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அந்த பெண்மணி சிகிச்சை பலனின்றி பலியானார். இந்நிலையில், தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இது பற்றி தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியபோது,

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் சுய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டும். இதனை தவிர்த்து விட்டு வெளியே சுற்றும் நபர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதனுடன் அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து