முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-1 2024-03-10

Source: provided

சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

7 கட்டங்களாக... 

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பாதுகாப்புக்காக... 

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வாக்களிக்க 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற்றது.  1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், பிற மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் காவலர்கள் உட்பட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இது தவிர தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 17 ஆயிரம் துணை ராணுவப் படைவீரர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். 

21 மாநிலங்களில்...

ராஜஸ்தானில் 12 , உத்தரப் பிரதேசத்தில் 8, மத்தியப் பிரதேசத்தில் 6, அசாம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 5, பீகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயாவில் தலா 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் & நிகோபார், ஜம்மு & காஷ்மீர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் தலா 1 தொகுதி உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 102 மக்களவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து