முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      விளையாட்டு
Hardick-pandya

Source: provided

சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.

மும்பை வெற்றி...

17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

18 ஓவர்கள் மட்டும்...

இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. அதனால் களத்திலேயே நடுவர்கள் உள்வட்டத்திற்கு வெளியே கடைசி 2 ஓவரில் ஒரு பீல்டரை குறைத்து மும்பைக்கு தண்டனை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து