முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

பெர்லின், ஜூலை. 19 - ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஜப்பான் அணி அமெரிக்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஜப்பான் அணி முதன் முறையாக இந்த சாதனையை படைத்து இருப் பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன. 

உலகக் கோப்பை மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்ம னி நாட்டின் தலைநகரான பெர்லினில் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்றது. இது நேற்று முன் தினத்துடன் கோலாகலாமாக நிறை வு பெற்றது. 

ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பா ன், ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ் போன்ற முன்னணி நாடுகள் பங் கேற்றன. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற முன்னணி நாடுக ளைச் சேர்ந்த வீராங்கனைகள் தரமான ஆட்டத் திறனை வெளிப்படுத் தினர். இதனைக் கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்தனர். 

முன்னதாக நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் வல்லரசு நாடான அமெரிக்க அணியும், ஆசிய நாட்டைச் சேர்ந்த ஜப்பான் அணியும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டம் நேற் று முன் தினம் நடந்தது. இதில் கோப்பையைக் கைப்பற்ற பலம் வாய்ந்த அமெரிக்க அணியும், ஜப்பான் அணியும் பலப்பரிட்சை நடத்தின. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றின், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் இருந்தன. இதை அடுத்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 

இதில் இரு அணிகளும், மீண்டும் தலா ஒரு கோல் அடித்ததால் 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் முடிந்தது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. 

இந்த வாய்ப்பை ஜப்பான் வீராங்கனைகள் நன்கு பயன்படுத்தினர். இறுதியில் ஜப்பான் அணி 3 - 1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ் த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது ஜப்பானுக்கு முதல் பட்டமாகும். 

உலகக் கோப்பை மகளிர் கால் பந்து போட்டியில் ஜப்பான் அணி சா ம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்