முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாக்ஹோம் ஓபன்: காலிறுதியில் ரோகன் - குரேஷி ஜோடி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஸ்டாக்ஹோம், அக். 21 - சுவீடன் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னி ஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெ ற்றது. ஆடவருக்கான ஏ.டி. பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான ஸ்டாக் ஹோம் ஓபன் டென்னிஸ் போட்டிகள் சுவீடன் நாட்டில் உள்ள முக்கிய நகரில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறு  ப்பான கட்டத்தை அடைந்து உள்ளது. 

இதில் பங்கேற்று வரும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தி வருகின்றனர். இதனைக் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை எட்டி உள்ளது. ஆடவருக்கான இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ரோகன் பொபண்ணா மற்றும் அய்சம் அல் ஹக் குரேஷி ஜோடியும், ஆஸ்திரிய மற்றும் போலந்து இணையும் மோதின. 

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜோடி அபாரமாக ஆடி 6 - 4, 6 - 3 என்ற நேர் செட் கணக்கில் ஜூலிய ன் நோவல் மற்றும் லூகாஸ் குபேட் இணையை வீழ்த்தி காலுறுதிக்கு தகுதி பெற்றது. 

முன்னதாக நடந்த முதல் செட்டில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜோ டி கவனமாக ஆடி புள்ளிகள் பெற்று முன்னேறியது. ஆஸ்திரிய மற்று ம் போலந்து இணை விரட்டி வந்த போதிலும், இந்திய மற்றும் பாகி ஸ்தான் ஜோடி முன்னிலையை தக்க வைத்து வெற்றி பெற்றது. 

அடுத்த நடந்த 2 -வது செட்டின் துவக்கம் முதலே பொபண்ணா மற்று ம் குரேஷி ஜோடி சிறப்பாக ஆடி புள்ளிகள் பெற்றது. அதே நேரம் எதிரணி அதிக தவறுகள் செய்ததால் பின்தங்கியது. இறுதியில் இந்திய மற்றும் பாக். ஜோடி வெற்றி பெற்றது. 

மற்றொரு  ஆட்டத்தில் ஜெர்மனியின் மிக்கேல் கோல்மேன் மற்றும் அலெக்சாண்டர் வாஸ்க் ஜோடியும், சுவீடனின் ஆன்ட்ரூஸ் சில்ஜஸ் மற்றும் ஜெர்மனியின் மார்டின் எம்ரிக் இணையும் மோத உள்ளன. 

இதில் வெற்றி பெறும் இணையுடன் இந்தியாவின் ரோகன் பொபண் ணா மற்றும் பாகிஸ்தானி ன் அய்சம் ல் ஹக் ஜோடி காலிறுதிச் சுற்றி ல் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்