முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா பயிற்சி

சனிக்கிழமை, 15 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, நவ 1 6 - இந்திய, பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு சீன படைகள் பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து மத்திய அரசிடம் எல்லை பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்திய, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்து சீன ராணுவம் பயிற்சியளித்து வருகிறது. இதனிடையே இந்திய நிலைகள், இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறது. இது பாகிஸ்தான் ராணுவத்தின் தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்ட போது தெரியவந்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் சியோல்கோட் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் போது அந்த மாநிலத்தில் ஊடுருவி தாக்குதல்களில் ஈ டுபட கூ டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்