முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல தயாரிப்பாளர் ராமநாயுடு மரணம்: கவர்னர் இரங்கல்

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - பழம்பெரும் பட தயாரிப்பாளர் ராமநாயுடு மறைவையொட்டி கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘பத்ம பூஷன்’, ‘தாதா சாகேப் பால்கே விருது’ பெற்றவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பழம்பெரும் பட தயாரிப்பாளருமான தகுபட்டி ராமநாயுடு திடீரென மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தம் மற்றும் அதிர்ச்சியுற்றேன். தெலுங்கு திரை உலகம் உன்னதமான ஒரு நபரை இழந்துவிட்டது. ராமநாயுடு என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்லாது மனிதநேயம் உடையவர்.

இவர் 13 மொழிகளில் 150 படங்கள் தயாரித்து பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். தனிமனிதராக அதிக படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். ராமநாயுடு மறைவு தெலுங்கு திரை உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து