முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு

புதன்கிழமை, 1 மே 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

காஷ்மீரின் அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதிக்கு மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின. 

அதே வேளையில் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தேர்தலை ஒத்திவைக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.

இந்த நிலையில் அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் மியான் அல்தாப் மற்றும் முன்னாள் முதல்வர்  மெகபூபா முப்தி உள்பட 21 வேட்பாளர்கள் இந்த தொகுதியில் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து