முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம், பவுனுக்கு ரூ.160 குறைந்தது

புதன்கிழமை, 4 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தங்கம் விலை பவுனுக்கு ரூ.160  குறைந்துள்ளது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 23-ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 80-ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று முன் தினம் ரூ.20 ஆயிரத்து 312 ஆக விற்றது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 152-ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.2,519க்கு விற்கிறது. சர்வதேச சந்தை விலையில் சரிவு ஏற்பட்டதால் தங்கம் விலை குறைந்ததாக கூறப்படுகிறது.
வெள்ளியும் கிலோவுக்கு ரூ.465 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 950 ஆகவும், ஒரு கிராம் ரூ.39.50 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து