முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3.50 லட்சம் வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம்: ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் முடங்கின

வெள்ளிக்கிழமை, 8 ஜனவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 5 கிளை வங்கிகளின் விதிமீறலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று  (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் உள்ள சில வங்கிகளின் வாசலில் இன்று காலை முதல் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, போபால், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் நேற்றைய வேலைநிறுத்த போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், நிருபர்களிடம் கூறியுள்ளார்.

நேற்றைய  வேலைநிறுத்தத்தால், தென்மண்டலத்தில் உள்ள வங்கிகளில் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6 லட்சம் காசோலைகளும், மேற்குமண்டலத்தில் உள்ள வங்கிகளில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 10 லட்சம் காசோலைகளும், வடமண்டலத்தில் உள்ள வங்கிகளில் சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 லட்சம் காசோலைகளும் என நாடு முழுவதும் சுமார் பதினாறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 21 லட்சம் காசோலைகளின் பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்றும், நாளை  வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் நேற்றைய வேலைநிறுத்த போராட்டத்தால் தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பது குறிப்படத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்