முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ஈரான்- ஆப்கானிஸ்தான் உறவால் பாகிஸ்தான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு துறை நிபுணர் அலறல்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      இந்தியா
Image Unavailable

 இஸ்லாமாபாத்  - ஈரானில் உள்ள சப்பார் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள உறவால் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் . ஈரானில் உள்ள சப்பார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா பெருமளவு நிதியுதவி செய்கிறது.

இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதால் நில எல்லையால் மூடப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஐரோப்பா பகுதிகளுக்கு செல்ல இந்தியாவிற்கு  பாகிஸ்தான் உதவியை நாட வேண்டியது இல்லை. இதுவரை இந்தியா , கடல் வழியாக ஆப்கானிஸ்தானை அடைய பாகிஸ்தான் வழியாகவே வரவேண்யுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் உதவியை எப்போதும் எதிர்பார்க்க முடியாது என்பதால் சப்பார் துறைமுக மேம்பாட்டிற்காக ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது. இந்த உறவால்  தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது .

பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சிஸ்தான் -பலுசிஸ்தான் மாகாணப்பகுதியில் சப்பார் துறைமுகம், எண்ணெய் வளம் மிக்க பாரசீக வளை குடா பகுதியில் அமைந்துள்ளது. அந்த துறைமுகம் பாரசீக வளை குடாவின் வெளியே அமைந்திருக்கிறது. இந்த துறைமுக உதவியால் பாகிஸ்தானை புறக்கணித்து இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதி வழியாக இதர நாடுகளுக்கு செல்ல முடியும். இதனால் பாகிஸ்தான் தற்போது அதிர்ச்சிஅடைந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்