முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை,  காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யாவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்துக்கு காவிரிநதி நீர் தர இயலாது என்று தமிழக விவசாயப் பிரதிநிதிகளிடம் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருப்பது பொறுப்பற்ற பேச்சாகும். காரணம் காவிரிநதி நீரைப் பொறுத்தவரையில் மழை அதிக அளவில் பெய்தாலும், குறைவாகப் பெய்தாலும் விவசாயத்தின் அவசியத்தை உணர்ந்து காவிரியிலிருந்து தமிழகத்துக்கு அட்டவணைப்படி மாதம் தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை பகிர்ந்து வழங்க வேண்டிய, பகிர்வு மனப்பான்மை இருக்க வேண்டும். அது தான் இந்திய ஜனநாயகத்தில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும்.ஆனால் நம் நாட்டின் நீதிமன்றத் தீர்ப்பையும் ஏற்க மாட்டேன், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்க மாட்டேன் என்று பிடிவாதப் போக்கினை கடைப்பிடிக்கின்ற கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத்தரக் கூடிய கட்டாய நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்