முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.25 கோடி தங்கம் மாயம்: : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து, கடந்த 4 ஆண்டுகளில், தங்கக் கட்டிகள் மற்றும் ஆபரணத் தங்கமாக மொத்தம் 80 கிலோ தங்கம் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு, ரூ.25 கோடியாகும். தங்கத்துக்குப் பதிலாக, பெட்ட கத்துக்குள் மஞ்சள் நிற உலோகத்தில் வார்க்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப் படுகிறது.

கடந்தாண்டு ஜூன் மாதத்தி லேயே, பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் டெல்லி காவல் துறையில் புகார் அளித்தனர். அதற்கும் முன்பாக, 2014-ம் ஆண்டில் ஜனவரி, ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் இதுபோன்ற வழக்குகள் பதியப்பட்டன.  உரிய நடவடிக்கை எடுக்கப் படாததோடு, பெட்டகத்தில் இருந்து தங்கம் மாயமாவது தொடர்ந்து நடப்பதால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் ஒப்புதலுடன் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய, நிதி அமைச்சகம் தீர்மானித்தது.

இதைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுங்கத் துறை பெட்டகத்தில் தங்கத்துக்குப் பதிலாக உலோகங்கள் வைக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்