முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நகர மேயராக இந்திய பெண் தேர்வு

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

 கலிபோர்னியா  - அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் முக்கிய நகராக விளங்கும் கூப்பர்டீனோ நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சவீதா வைத்தியநாதன் :
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளதால் உலக அளவில் பிரபல நகராக கூப்பர்டீனோ விளங்குகிறது. இந்நிலையில் இந்நகரில் முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவீதா வைத்தியநாதன் என்ற பெண் கடந்த வாரம் புதிய மேயராக பதவியேற்றார்.

எம்.பி.ஏ. பட்டதாரியான சவீதா, உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாகவும், வணிக வங்கி ஒன்றில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இதுதவிர தன்னார்வ அமைப்பு ஒன்றிலும் பணியாற்றியுள்ளார். இவரது பதவியேற்பு விழாவில், இந்தியாவில் இருந்து சென்றிருந்த இவரது தாயாரும் பங்கேற்றார்.

கூப்பர்டீனோ நகரில் கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வரும் சவீதா பல்வேறு சமூகநலப் பணிகளில் தீவிரப் பங்கேற்று வருகிறார். பதவியேற்ற இரு நாட்களுக்குப் பிறகு கல்வி தொடர்பாக தனது முதல் உத்தரவை சவீதா பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்