முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு விநாடி தாமதமாக பிறக்கும் புத்தாண்டு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

புதுடெல்லி  - பூமியின் ஒருநாள் சுழற்சியை அடிப்படை யாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படு கிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அணு கடிகாரம் மூலமும் நேரம் கணக்கிடப்படு கிறது. இது மிகவும் துல்லியமானது. தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக பூமி ஒரே வேகத்தில் சுற்று வது இல்லை. நிலவின் ஈர்ப்பு விசை, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் சுற்றுகிறது. இதனால் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வானியல் நேரத்துக்கும் அணு கடிகாரத்தின் நேரத்துக்கும் நூலிழை வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது.

லீப் வினாடி :
அதன்படி 500 முதல் 750 நாட்கள் கால அளவில் வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையே ஒரு விநாடி வேறுபாடு ஏற்படுகிறது. இதை ஈடுசெய்ய உலகின் அணு கடிகாரங்களில் அவ்வப்போது ஒரு விநாடி கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இது லீப் விநாடி என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 30 அல்லது டிசம்பர் 31-ம் தேதிகளில் இந்த லீப் விநாடி சேர்க்கப்படும். கடந்த 1972-ம் ஆண்டில் லீப் விநாடி முதல்முறையாக அறிமுகமானது.

அன்றுமுதல் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் வரும் 31-ம் தேதி லீப் விநாடி சேர்க்கப்படுகிறது. எனவே வரும் 2017 புத்தாண்டு பிறக்க கூடுதலாக ஒரு விநாடி நேரமாகும் என்று சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு  அறிவித்துள்ளது.  லீப் விநாடி குழப்பத்தை தவிர்க்க கூகுள் நிறுவனம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி கூகுளின் சர்வர் கடிகாரம் ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாகச் சுற்றும் என்று அந்த நிறுவனம் தெரிவித் துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்