முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் ரூ.89.00 இலட்சம் மதிப்பீட்டிலான பாலம் விரிவாக்கப் பணியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      கோவை
Image Unavailable

   திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வெஞ்சமடை வாய்க்கால் பாலம்  விரிவாக்கப்பணியினை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன்  முன்னிலையில்  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்   பூமி பூஜையுடன் இன்று (28.01.2017) தொடங்கி வைத்தார்.

          உடுமலைபபேட்டை வட்டம் , உடுமலை - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஞ்சமடை வாய்க்கால் பாலம்  விரிவாக்கப்பணியினை ரூ.89.00 இலட்சம்  மதிப்பீட்டில் பூமி பூஜையுடன்  வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்  தொடங்கி வைத்தார்.  இப்பாலமானது  8.5 மீ. அளவிலிருந்து 23.08 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது . இப்பணியானது 6 மாத காலத்திற்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது.  இப்பணியினை விரைவாகவும் , தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு  அமைச்சர்  அறிவுறுத்தினார். 

             இதனைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்  திட்டம் 2016-2017 -ன் கீழ் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டைஊராட்சி , சிவசக்தி காலனியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளவு கொண்ட  மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மற்றும் ரூ.9.75 இலட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணிகளையும்    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்கள்.

                   இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் குருநாதன், உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையாளர்  சரவணக்குமார், உடுமலைப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, பி.இராஜகோபால்  முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்