முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மனிதநேய வாரவிழாவின் நிறைவுநாள் விழாவில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வாரவிழாவின் நிறைவுநாள் விழாவில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படும் பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்  பேசியதாவது,

வாழ்க்கையோடு இணைந்தது தான் பண்பாடு மற்றும் மனிதநேயம் ஆகும். வளரும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒழுக்கம், நல்லநெறிகள் மற்றும் மனிதநேயத்தை சொல்லிதர வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி அறிவோடு மனிதநேயத்தை கற்றுத்தரவேண்டும். தற்போது உதவும் மனப்பான்மை குறைந்து வருகிறது. வளரும் சமுதாயமான மாணவ, மாணவியர்கள் பிறருக்கு மனிதநேயத்துடன் உதவி சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். நம் அனைவரின் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயம் வெளிப்பட வேண்டும். யோசிக்காமல் பிறருக்கு உதவிடுதல், அன்பு காட்டுதல் ஆகியவைகள் மனிதநேயத்தின் அங்கமாகும். நாம் அனைவரும் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

          இவ்விழாவில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான பாரட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர்  வழங்கினார். மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, ஆதிதிராவிடர் நலக்குழு, மாவட்ட கொத்தடிமை குழு உறுப்பினர்களுக்கு, கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் பாரட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.

இவ்விழாவில் தாட்கோ மாவட்ட மேலாளர் எம்.போஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிபபு குழு உறுப்பினர்கள் மா.ராமன், ஏ.எம்.குப்புசாமி, பி.எம்.கிருஷ்ணசாமி, ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர்கள் செ.மோகன்ராஜ், திரு,கே.குப்புசாமி, கொத்தடிமை குழு உறுப்பினர் சி.ரவிச்செல்வம், துணை வட்டாட்சியர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்கள், விடுதி செயலாளர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ்.வி.குமார் வரவேற்புரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன்  நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்