முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்,

 

விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,., தலைமையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (04.02.2017) தொடங்கி வைத்து, தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

 

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், சுமார் 22,000 நபர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 7,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி விழாப்பேருரையாற்றினார்.

 

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 112 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டது. இதில் 7,000 இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இந்த வேலைவாய்ப்பு முகாம் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

 

இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி அரங்கமும் இம்முகாமில் அமைக்கப்பட்டது. வேலைவாய்ப்புப் பயிற்சி வேண்டி 5,500 இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் இதுவரை பதிவு செய்துள்ளார்கள் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெறமுடியாமல் இருப்பவர்களுக்கு, ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி, அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் ஒரு கன்னியமான வாழ்க்கை அமைத்துத்தர வேண்டி நடத்தப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முகாமினை அமைத்த அனைத்து நிறுவனங்களுக்கும், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

 

இம்முகாமில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, விழுப்புரம் ஊரக வாழ்வாதார இணை இயக்குநர்ஃதிட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், மாவட்ட திட்ட மேலாளர் (புதுவாழ்வு திட்டம்) நித்யானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்