முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கையும் - யமுனையும் நதிகள் அல்ல உயிருள்ள மனிதர்கள் : உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

டேராடூன்  - கங்கையும், யமுனையும் நதிகளல்ல அவை உயிருள்ள மனிதர்கள் என, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புனித நதிகள்
இந்தியாவின் புனித நதிகளாக கங்கை, யமுனை நதிகள் கருதப்படுகின்றன. கங்கையில் தலை முழுகினால் பாவங்கள் அனைத்தும் தீரும் என மக்களிடையே பரவலான நம்பிக்கை உள்ளது. எனினும் உலகின் மாசடைந்த 10 நதிகள் பட்டியலில் கங்கையும் இடம் பெற்றுள்ளது.இதனால் கங்கையை தூய்மைப்படுத்த பலகோடி ரூபாய்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இந்த நிலையில், கங்கையும், யமுனையும் நதிகளல்ல அவை உயிருள்ள மனிதர்கள் என உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கங்கை நதி தூய்மை தொடர்பான பொது நல வழக்கொன்றில் உத்தரகாண்ட் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில் “ புனித நதிகளான கங்கை, யமுனை இரண்டையும் உயிருள்ள மனிதர்களாக் கருத வேண்டும். கங்கை நதியை தூய்மைப்படுத்தி, புனரமைக்கும் நமாமி கங்கா திட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை வழக்கறிஞர் இருவரும் இந்த நதிகளின் சட்ட ரீதியான பெற்றோர்களாக செயல்பட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும்”.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்