முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்த மாணவர்களுக்கு தொழிற் நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கம்

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      வேலூர்

 

2016-17ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி உயர் கல்வி செல்லவிருக்கும் மாணவ / மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் ஒவ்வொரு ஒன்றிய அளவில் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான கருத்தாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் 04.04.2017 காலை 09.30 மணியளவில் காட்பாடி காந்தி நகர், அனைவருக்கும் கல்வி திட்டம் (ளுளுஹ) கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன முதல்வர் அ. பஷீர் அகமது தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட வேலை வாய்ப்பக இணை இயக்குநர் வி. கருணாகரன், கல்லூரி கல்வி அலுவலக மண்டல இணைக்குநரகம் சார்பில் உதவி பேராசிரியை முனைவர். ஜெயசுதா, மாவட்ட கருத்தாளர் விரிவுரையார் சி. குமார் ஆகியோர் கருத்தாளர்களாக கருத்துக்களை வழங்கினார்கள். மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் கே.ஜோதீஸ்வரன்பிள்ளை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எல். ஜெய்சங்கர், திருப்பத்தூர் கல்வி மாவட்ட உதவி ஆய்வாளர் தாமோதரன், தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா. ஜனார்தனன் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர். இப்பயிற்சி கருத்தரங்கில் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஒன்றியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 80பேர் பங்கேற்றனர். இப்பயிற்சி கருத்தரங்கில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மேல்நிலை கல்வியில் பொதுக்கல்வி, தொழிற்கல்வி பெறும் வழிமுறைகள், பாலிடெக்னிக், டிப்ளமோ, ஐடிஐ, வேலைவாய்ப்புக்கென எழுத வேண்டிய போட்டித் தேர்வுகள் திறன் மேம்பாட்டு பயிற்சி, சுய வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை பெற உள்ள வழிமுறைகள் குறித்து வழிகாட்டுதல் பெறப்படும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவம் மருத்துவம் சார்ந்த படிப்புகள், பொறியியற் படிப்பு, கலை மற்றும் இதர படிப்புகள், வணிகவியல் படிப்புகள் என பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான படிப்பு பெறுவதற்கான வழிமுறைகள், சுயவேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகள், கல்வி உதவித் தொகை பெறும் வழிமுறைகள் ஆகிய தலைப்புகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் தரப்படும். எனவே மாணவர்கள் அனைவரும் தங்கள் ஒன்றியத்தில் அமைந்துள்ள தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சென்று தேவையான விவரங்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றம் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துக் கொண்டனர். பயிற்சி நடைபெறும் ஒன்றியம் மற்றும் வளாகம் இணைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்