முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சுகாதார ஆணைய இந்திய உயர் அதிகாரி நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஒபாமா ஆட்சியின்போது அமெரிக்க பொது சுகாதார சேவை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
நீக்கும் நடவடிக்கை தீவிரம்

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாள் முதலாக, அந்நாட்டின் பல்வேறு துறைகளில் முக்கியப் பதவி வகிக்கும் வெளிநாட்டினரை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமெரிக்க பொது சுகாதார சேவை ஆணையத்தின் தலைவராக முந்தைய ஆட்சியின் போது நியமிக்கப்பட்டிருந்த இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி நேற்று பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அமெரிக்க சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘சர்ஜன் ஜெனரல் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும்படி விவேக் மூர்த்திக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் ஆணையத்தின் உறுப்பினராக அவர் தொடர்ந்து செயல்படுவார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்திக்கு பதிலாக துணை தலைவராக உள்ள சில்வியா ட்ரெண்ட் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்