முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் எடையை அதிகரிக்க உபயோகமான டிப்ஸ்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும்.

உடல் எடையை அதிகரிக்க ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....

* தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

* ரொம்ப ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.

* உடல் எடையை சீராக்க தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

* பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் குடியுங்கள்.

* வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட் சாப்பிடலாம்.

* சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள்.

* ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.இதனால் உங்கள் உடல் எடை மாற்றத்தை உணர்வீர்கள்.

* உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

* நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும்.

* உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள்

* குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

* குறைந்த நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும். குறைவாக தூங்குவதால் அதிக பசி ஏற்பட்டு, கூடுதலாக சாப்பிட தோன்றும்.

* இரவு 8 மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

* உலர் பழங்கள் , ஒரு கப் தயிர் , அவித்த சோளம் , கொஞ்சம் ஜூஸ் இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.

* மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.

* இனிப்பான பிரெட் , சர்க்கரை இல்லாத மில்க்ஷேக் , பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம்.

* காலையிலும், மாலையிலும் பாலில் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

* காலை , இரவு பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும்.

* உடல் எடையைக் கூட்ட தினமும் இரண்டு பேரீச்சம் பழமும் பாலும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

* உடல் மெலிவாக இருப்பவர்கள், எள்ளால் தயாரிக்கப்படும் திண்பண்டங் களை சாப்பிட்டு வர, சதை பிடிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago