முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகளை எதிர்த்து மாநாடு: தமிழகம் உள்பட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      இந்தியா
UGC

Source: provided

பெங்களூரு: துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் முடிவுக்கு எதிராக உயர்கல்வி அமைச்சர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் உள்ளிட்ட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிமுறைகள் குறித்து விவாதிக்க ஏழு மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி மந்திரிகள் இன்று பெங்களூருவில் தேசிய அளவிலான கூட்டத்தை நடத்த உள்ளனர்.

முன்னதாக மத்திய கல்வித்துறை பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளில் திருத்தம் செய்து வெளியிட்டது. அதில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லை என்ற நிலையில் அந்த விதிமுறைகள் உள்ளன. இதற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள் இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.

இந்த மாநாட்டை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களின் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து