முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள்: டெல்லி வாக்குகளர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

புதுடெல்லி: முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள் என்று டெல்லி வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. 

இந்த சூழ்நிலையில் நேற்று நடந்த வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. பாதுகாப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள். நினைவில் கொள்ளுங்கள்- முதலில் வாக்கு, பின்னர் புத்துணர்ச்சி" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து