முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      இந்தியா
Us

Source: provided

அமிர்தசரஸ் : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் நேற்று பகல் 1.55 மணியளவில், அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்துள் ளது. இந்த விமானம் தரையிறங்குவதை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்து இறங்கி விமானத்தில் ஹரியாணா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா 33 பேரும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேரும், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசத்திலிருந்து தலா மூன்று பேரும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அமெரிக்க விமானத்தில் வந்த இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் விவரம் பதிவு செய்த பின் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி இருக்கிறதா என்றும் அதிகாரிகள் விசாரணை செய்யவிருக்கிறார்கள். சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் நேற்றுமுன்தினம் தகவல் தெரிவித்திருந்தது. இதில் 205 பேர் வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. 

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ம் தேதி அவா் கூறினாா்.

இதுவரை 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் படிப்படியாக திருப்பி அனுப்பப்படுவர் என்றும் கூறப்படுகிறது. வேலை கிடைத்து முதலில் விசா கிடைத்துத்தான் பலரும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதாகவும் பிறகு விசா காலம் முடிவடைந்த பிறகும் அவர்கள் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கிவிடுவதால் சட்டவிரோதக் குடியேறிகளாக மாறிவிடுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வரலாற்றிலேயே முதல் முறையாக, நாட்டுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கண்டுபிடித்து ராணுவ விமானத்தில் ஏற்றி அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்புகிறோம் என்று டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் கூறியிருந்த நிலையில், முதல் ராணுவ விமானம் அமிர்தசரஸ் வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து