முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி. அணிகள் நாக்பூரில் இன்று மோதல்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      விளையாட்டு
INDIA-1 2024-10-23

Source: provided

நாக்பூர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.

சுற்றுப்பயணம்... 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.

பதிலடி கொடுக்க...

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு ஒருநாள் தொடர் மூலம் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சிக்கும். அதே வேளையில் சொந்த மண்ணில் வெற்றிப் பயணத்தை தொடர இந்தியா கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து