முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவையினங்களை வேட்டையாடியதாக அதிபர் டிரம்ப் மகன் மீது இத்தாலியில் வழக்குப்பதிவு

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      உலகம்
Trump

Source: provided

வெனிஸ் : இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டிரம்ப் ஜூனியர், கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் வெனிஸ் மாகாணத்தில் உள்ள காம்பக்னா லூபியா நகரின் பாதுகாக்கப்பட்ட ஏரியில் பாதுகாக்கப்பட்ட வாத்து இனங்களை வேட்டியாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. விடியோவில், 6 பறவைகளை வேட்டையாடிருப்பது போன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த விடியோ வைரலான நிலையில், இத்தாலிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் பறவை இனங்களை, குறிப்பாக சிவப்பு ஷெல்டக் வகை வாத்தை வேட்டையாடியதற்காக டிரம்ப் ஜூனியர் மீது ஐரோப்பிய பசுமைக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரியா சனோனி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும், இத்தாலி, டிரம்ப் ஜூனியரின் கொல்லைப்புறமாக மாறியதுபோல இருக்கிறது. இத்தாலி, அமெரிக்காவின் சொத்து அல்ல; இத்தாலியை அமெரிக்காவால் ஆட்சி செய்ய முடியாது’’ சனோனி கூறினார். இருப்பினும், அனுமதிக்கப்பட்ட பகுதியில் தாங்கள் வேட்டையாடுவதற்கு அனுமதி பெற்றிருந்ததாகவும் டிரம்ப் ஜூனியர் தரப்பில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, டிரம்ப் ஜுனியர் மீதான வழக்கில் விசாரணை நடத்தப்படும் என்று இத்தாலிய நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், டிரம்ப் ஜூனியருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டுமே விதிக்க நேரிடலாம். இத்தாலியில் வேட்டையாடுபவர்கள் கண்டிப்பாக அந்நாட்டில் வசிப்பவர்களாகத்தான் இருக்கவேண்டும். அல்லது தனியார் வேட்டைப்பகுதிகளில்தான் வேட்டையாடுதல் வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து