முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் ஸ்ரீஅபிராமி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீஅபிராமி அம்மன் உடனுறை ஸ்ரீபத்மகிரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகப்பிரசித்தி பெற்ற சிவாலயம் ஸ்ரீஅபிராமி அம்மன் உடனுறை ஸ்ரீபத்மகிரீஸ்வரர் ஆலயம். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இவ்வருடத்திற்கான திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு ஞீஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கொடிமரத்தை வணங்கினர். அதனைத் தொடர்ந்து அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர், ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு ஞீஜைகள் செய்தனர். மேலும் பரிவார தெய்வங்களுக்கும் ஞீஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

மே 6ம் தேதி வரை தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக மே 7ம் தேதி திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து ஞீப்பல்லக்கில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. மே 8ம் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. அப்போது அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வருடன் தேரில் எழுந்தருளி 4 ரதவீதிகளில் வீதியுலா வருவார். 9ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்