முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறை சார்பில் கருத்தரங்கம்

வியாழக்கிழமை, 4 மே 2017      வேலூர்
Image Unavailable

 

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறையின் வழிகாட்டி மையத்தின் சார்பில் போட்டித்தேர்வுகளை சந்தித்து வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கு

இக்கருத்தரங்கில் கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, கல்லூரி சிறப்பு அலுவலர் டி.பிரபு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம், எம்பிஏ துறைத்தலைவர் கே.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழிகாட்டி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரகோத்தமன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலையில் இயங்கி வரும் சென்னை ரேடியன் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் கே.தமிழ்வேந்தன் கலந்துகொண்டு பேசியது, இன்றைய காலகட்டத்தில் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த போட்டிகளில் நீங்கள் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும். தினமும் செய்தித்தாள்களை படித்து போட்டித்தேர்வுக்கான வாய்ப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இதன் மூலம் உங்களுக்கு பொது அறிவும் வளரும். நீங்கள் எந்த அரசு பதவிக்கு செல்ல வேண்டும். என்று தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகு அந்த பதவிக்கு செல்ல கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுக்குள் ஒரு உந்து சக்தி வேண்டும். அதிக புத்தகங்களை படிக்க வேண்டும். படித்தவைகளை எழுதி பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நினைவு சக்தியும், தன்னம்பிக்கையும் வளரும். இந்திய அளவில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தாய்மொழி ஒரு தடையாக இருக்காது. நீங்கள் தமிழ்மொழியில் எழுதி வெற்றி பெறலாம். படிப்புதான் உங்கள் எதிர்காலம், உங்கள் வாழ்க்கை என்று நினைத்து முழு கவனத்துடனும் வெற்றியை நோக்கி முயற்சிக்க வேண்டும். உங்களுக்கான ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை அடைய திட்டமிட்டு படித்து வெற்றி பெற வேண்டும். என்று பேசினார். முடிவில் பேராசிரியர் டி.யுவராஜ் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்