முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்நிலைகளில் மண் எடுக்க அனுமதி : விவசாயிகள், விஏஓக்களுடன் அதிகாரிகள் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      திருநெல்வேலி

நீர்நிலைகளில் மண் எடுப்பது தொடர்பாக விவசாயிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விளக்கம் கூட்டம் நடத்தப்பட்டது.

 வட்டாட்சியர்களுக்கு அதிகாரம்

பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஆறு குளம் மற்றும் ஏரிகளில் வண்டல் மண், களிமண் எடுப்பதற்கான உத்தரவை அளிக்க அந்தந்த வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திற்குட்பட்ட கடையம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம் குறுவட்டத்திற்குபட்ட நீர்நிலைகளில் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு விளக்கம்

சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பார்கவிதங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குறுவட்டங்களுக்குட்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நீர்நிலைகளில் வண்டல்மண் மற்றும் களிமண் எடுக்கும் அனுமதி அளிக்க வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என்றும், வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அதற்குரிய அனுமதியை வழங்குவார் என்றும், ஒரு குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி மண் எடுக்க கூடாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பூதத்தான், வருவாய் முதுநிலை உதவியாளர் பாலசுபபிரமணியன், வருவாய் ஆய்வாளர்கள் சங்கர், சுப்புலட்சுமி, அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து