எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா மற்றும் தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவுக்கு முக்கிய சவாலாக விளங்குவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சமாளிக்க ராணுவத்துக்கு அதிநவீன தொழில் நுட்பங்கள் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் ராணுவத் துக்கான நிலைக்குழுவின் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் மேட்டிஸ் பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில், ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா மற்றும் தீவிரவாத அமைப்புகள் ஆகியவை நம் நாட்டுக்கு சவால் தருபவையாக விளங்குகின்றன. இவற்றை ராணுவம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இந்த நாடுகள் அனைத்தும் கடந்த காலங்களில் நம் நாட்டின் ராணுவ வியூகங்களை எதிர்கொள் வதற்கு ஏற்ற வகையில் தங்கள் பலத்தையும் அணுகுமுறையை யும் மேம்படுத்திக் கொண்டுள்ளன.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நாம் அதிகாரம் செலுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக, ரஷியா தனது ராணுவ பலத்தை அதிகரித்திட அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. இதுபோல சீனா தனது ராணுவ பலத்தை விரிவுபடுத்தவும் நவீனப் படுத்திக் கொள்ளவும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
நம் நாட்டையும் நேச நாடுகளையும் அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. இதுதவிர, எதிரி நாட்டு அரசுகள் மற்றும் தொழில் துறைக்கு எதிராக இணையதள வழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. மேலும் ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு தருவதுடன் சிரியா, இராக், யேமன் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்க தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இதுதவிர, ஐஎஸ், அல்காய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் நம் நாட்டுக்கும் நமது நேச நாடு களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத் தலாக இருந்து வருகின்றன. எனவே, இந்த 5 முக்கிய சவால் களையும் எதிர்கொள்ள, நமது ராணுவத்துக்கு அதிநவீன தொழில்நுட்பங்களும் திறமை யான வீரர்களும் தேவைப்படு கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |