முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க நிர்வாகிகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதியுதவி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி ஆறுதல்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்தில் மரணமடைந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துயர சம்பவங்களால் நலிவடைந்துள்ள  53 குடும்பங்களுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவாரண நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மரணமடைந்த அ.தி.மு.க நிர்வாகிகள் குடும்பத்தினருக்கும், பல்வேறு துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த குடும்பங்களுக்கும் அ.தி.மு.க சார்பில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவாரண நிதி உதவிகளை வீடுதேடிச் சென்று வழங்கி வருகிறார்.இதன் ஒரு பகுதியாக கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு மருதங்குடி,எஸ்.வெள்ளாகுளம், வேப்பங்குளம்,இலுப்பங்குளம்,சுந்தரங்குண்டுஉள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மரணமடைந்த அ.தி.மு.க  நிர்வாகிகள் குடும்பத்தினருக்கும்,பல்வேறு துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த 53 குடும்பங்களுக்கும்  அ.தி.மு.க சார்பில் நிவாரணநிதியுதவி வழங்கிடும் நிகழ்ச்;சி நேற்று நடைபெற்றது.இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கள்ளிக்குடி ஒன்றியத்தில் மரணமடைந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துயர சம்பங்களில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மரணமடைந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி 53க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட அனைத்து குடும்பத்தினரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணிச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வம், திருப்பதி,ஒன்றியச் செயலாளர்கள் மகாலிங்கம்,ராமசாமி,அன்பழகன், முன்னாள் யூனியன் துணை சேர்மன் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து