முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 பேர் பலி

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கோழிக்கோடு: கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாலுசேரி தாலுகா மருத்துவமனையின் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் வட மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்குதல் உள்ளது. இதற்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தாலுகா மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இவர்கள் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலுசேரி மருத்துவமனையில் இந்த இருவருக்கும் சிகிச்சை அளித்த 4 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பலரை ஒரு வாரத்துக்கு விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து