முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைலாஷ் யாத்திரை புகைப்படம்: அனுபவத்தைப் பகிர்ந்தார் ராகுல்

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அழைத்தால் மட்டுமே கைலாஷ் செல்ல முடியும் என தனது பாத யாத்திரை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், கைலாஷ் - மானசரோவர் 12 நாள் புனித பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். ஆகஸ்டு 31-ஆம் தேதி நேபாளத்தில் தொடங்கி இப்புனிதப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் போது சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து தனது அனுபவங்களையும், புகைப்படங்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

மானசரோவரில் ஓடும் நீரானது மேன்மையாகவும், அமைதியாகவும் உள்ளது. அவை நமக்கு அனைத்தையும் அளித்தாலும், எதையும் இழப்பதில்லை. இந்த புனித நீரை யார் வேண்டுமானாலும் பருகலாம். இதில் எந்த வெறுப்பும் இல்லை. இதனால் தான் இந்தப் புனித நீரை இந்தியர்களாகிய நாம் அனைவரும் வணங்குகிறோம். கைலாஷ் நம்மை அழைத்தால் மட்டுமே நம்மால் அங்கு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து