முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியப் பிரதேசத்தில் நான்காவது முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும்: ராஜ்நாத்சிங்

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால்,மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து 4-ஆவது முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து சாதனை படைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் வரும் 28-ம் தேதி சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சிங்ரௌலியில்  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:மணமகன் இல்லாமல் திருமணத்துக்கு தயாராவதுபோல காங்கிரஸ் கட்சியில் நிலை உள்ளது. இங்கு யாரையும் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் அறிவிக்க முடியவில்லை. ஏனெனில், அவர்கள் கட்சிக்குள் அதிகாரத்துக்கு தங்களை முன்னிருத்திக் கொள்ள அந்த அளவுக்கு போட்டி உள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள ஒரு தலைவராவது காங்கிரஸில் உள்ளரா? என்றால் அதுவும் இல்லை.

மக்கள் பணியாற்றி இருந்தால்தானே காங்கிரஸ் தலைவர்களை மக்கள் மனதில் வைத்திருப்பார்கள்.அதே நேரத்தில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான், பொதுமக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். முக்கியமாக ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மத்தியில் அவர் பிரபலமாக உள்ளார். அவர் நிறைவேற்றிய அனைத்து நலத்திட்டங்களும் நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.பல ஆண்டுகளாக வளர்ச்சியில் பின்தங்கிய இருந்த மத்தியப் பிரதேசத்தை கடந்த 15 ஆண்டுகளில் பா.ஜ.க வெகுவாக முன்னேற்றியுள்ளது. இந்த முறை நடைபெறும் சட்ட சபை தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்று தொடர்ந்து 4-ஆவது முறையாக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து