முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ரயில் சோதணை ஓட்டம்.

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- பாம்பன் ரயில் தூத்துபாலத்தில் ஏற்பட்ட தண்டவாளம் விரிசல் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததையொட்டி தூக்குபாலத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதணை ஒட்டம் நடத்தி நேற்று  அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
  மண்டபத்தையும்,ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2.5 கி.மீ தூரத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் சுமார் 100 மீட்டர் அளவில் கடலில் கப்பல் கடந்து செல்லும்போது தண்டவாளம் தூக்கும் அமைப்பாக தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தமிழகத்தில் வீசிய கஜா புயல் நேரத்தில் மண்டபம்,பாம்பன்,ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் இருந்த மீன்பிடி படகுகளை பாதுகாப்பு கறுதி பாம்பன் தென் கடல் பகுதிக்கு கொண்டு வருவதற்காக துக்கு பாலம் திறக்கப்பட்டது.அப்போது பாலம் சேதமடைந்து  தூக்கு பாலத்தின் ஜாயிண்டிங் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.அந்த பகுதியை சிரமைத்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் பழுது நாளடைவில் பெரிதாகி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.ஆதலால் ராமேசுவரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்வே நிர்வாகம் இயக்கி வந்தது.இந்நிலையில் பழுதடைந்த பகுதியை ரயில்வே நிர்வாகம் விரைந்து சீரமைத்து நேற்று முடித்தது. இதனையடுத்து தூக்கு பாலத்தில் ரயில் சோதணை ஓட்டம் நேற்று நடைபெற்றது.இதில் மண்டபம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேது விரைவு ரயிலை அதிகாரிகள் தூக்கு பாலத்தில் இயக்கி பாலத்தின் அதிர்வும்,பழுதடைந்த பகுதியின் தன்மைகள் குறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுமான பிரிவு ஆரய்ச்சியின் இயக்குநர் சந்தோஷ் கபூரியா ஆய்வு நடத்தினர். பின்னர் பாலத்தில் 15 நாட்கள் ரயில் சோதணை முடிந்து பாலத்தின் தன்மை குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு அறிக்கை அளிப்போம்.அதன் பிறகு ரயில்வே நிர்வாகம் பாலத்தில்  ரயில்கள் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கம்  என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து