முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் நாட்டில் பயங்கரம்: சரக்கு விமானம் நொறுங்கி விழுந்து 10 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

டெக்ரான் : ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோசமான வானிலை

கிரிகிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்-கில் இருந்து ஈரானின் கராஜ் பகுதியில் உள்ள பயாம் சர்வதேச விமான நிலையத்துக்கு, போயிங் பி707 என்ற சரக்கு விமானம் சென்றது. விமானத்தில் 10 பேர் இருந்தனர். பாயம் விமான நிலையத்தில் நேற்று காலை தரையிறங்க வேண்டிய விமானம், மோசமான வானிலை காரணமாக, விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

உடல் கருகி பலி...

இதனால் வழக்கமாகத் தரையிறக்கும் பகுதியை விட்டு வேறு இடத்தில் இறங்கியது. இதில் நிலை தடுமாறிய விமானம் விழுந்து நொறுங்கியது. பின் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வண்டிகள் சென்று தீயை போராடி அணைத்தன. இருந்தாலும் விமானம் முழுவதுமாக எரிந்துவிட்டது. அதில் இருந்த 10 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து