முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தி நினைவு நாளான இன்று மதுக்கடைகளை மூடவேண்டும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
கன்னியாகுமரியை சேர்ந்த ரசீத் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் பள்ளிகளும் உள்ளன.டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் போதையில் தகராறு செய்கிறார்கள். இதனால் அந்த பகுதி பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் எதிர்மனுதாரராக மதுவிலக்கு ஆயப்பிரிவு உள்துறை செயலாளரை சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விளவங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் இன்று 30-ந்தேதி மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து