முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் வேட்பாளராக ஜோதிமுத்து போட்டி: பா.ம.க.2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கான 2-வது வேட்பாளர் பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. 
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அன்புமணி ராமதாஸ் மீண்டும் தர்மபுரியில் போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளில் வடிவேல் ராவணன், கோவிந்தசாமி, ஏ.கே.மூர்த்தி, சாம்பால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

நேற்று மீதம் உள்ள ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கான 2-வது வேட்பாளர் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக பா.ம.க. துணை தலைவர் அ.வைத்திலிங்கம், திண்டுக்கல் வேட்பாளராக பா.ம.க. துணை பொது செயலாளர் க.ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து