முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தூதரகத்தில் இளவரசர் சார்லசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரமாண்ட விருந்து

புதன்கிழமை, 5 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்பாடு செய்த பிரமாண்ட விருந்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டார்.

உற்சாக வரவேற்பு...

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோருக்கு, உற்சாக வரவேற்புடன் பக்கிங்காம் அரண்மனையில் மிகப்பெரிய விருந்தினை அரச குடும்பத்தின் சார்பில் ராணி 2ம் எலிசபெத் அளித்திருந்தார்.

இரவு விருந்து...

இந்நிலையில் இதற்கு பதில் விருந்து அளிக்கும் வகையிலும், நட்பு ரீதியாகவும் நேற்று இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் டிரம்ப் மற்றும் மெலானியா ஆகியோர் பிரமாண்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரை அதிபர் டிரம்ப் வரவேற்று விருந்து நடைபெறும் இடத்துக்கு அழைத்து சென்றார். இந்த இரவு விருந்தில் இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, அவரது கணவர் பிலிப் மற்றும் அரசு குடும்பத்தின் பிரபுக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து