முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதல் முறையாக டி.கல்லுப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறப்பு பயிற்சி :

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம். - தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை தலைமையகத்திலிருந்து மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி வட்டார நீர்வடிப்பகுதி விவசாயிகளுக்கு மாநிலத்தில் முதல் முறையாக காணொளி காட்சி மூலம் மண்வளம் மாற்றுப் பயிர் நீர் மேலாண்மை மற்றும் நுண்நீர் பாசன தொழில்நுட்ப நேரலை பயிற்சி நடத்தப்பட்டது.
 டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில் மாநிலத்தில் உள்ள 24 மாவட்ட நீர்வடிப்பகுதி விவசாயிகள் நேரலையில் பங்கேற்றனர்.இப்பயிற்சியில் நீர் தேவை குறைவாக உள்ள பயிர்களான பயிறு வகைகள் தானிய பயிர்கள் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி மற்றும் இரகத்தேர்வு மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை இயற்கை வழி வேளாண் முறைகளான பஞ்சகவ்யா ஜீவாமிர்தம் நிலதானிய விதைப்பு மண் குறைபாடு நேர்த்திமுறைகள் குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி  செல்வராஜ் அவர்கள் காணொளி காட்சி  நேரலை மூலம் விளக்கி கூறினார்.
 ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நீர்வடிப்பகுதி விவசாயிகள் குழு உறுப்பினர்கள் உதவி பொறியாளர் விரிவாக்க அலுவலர் திட்ட மேலாளர் மற்றும் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு நேரலை மூலம் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர் மாநிலத்திலேயே நேரலை மூலம் விவசாயிகளுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட இப்பயிற்சியில் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து