முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டிகள் சர்ச்சையில் இருந்து சுனில் நரின் விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினின் (வெஸ்ட் இண்டீஸ்) பந்துவீச்சு, பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தின் போது சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் உல்ஹாஸ் காந்தி, கிறிஸ் காப்பானி ஆகியோர் புகார் அளித்தனர். இதையடுத்து சுனில் நரின் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது பந்துவீச்சு முறைகளில் சில மாற்றங்களை செய்து அதை சுனில் நரின் ஆய்வுக்கு உட்படுத்தினார். முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், ஐ.சி.சி. போட்டி நடுவர் ஸ்ரீநாத், முன்னாள் நடுவர் ஹரிகரன், இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் ஆகியோர் அடங்கிய ஐ.பி.எல். தொடரின் சந்தேக பந்து வீச்சு கமிட்டி அவரது பந்து வீச்சை பல்வேறு கோணங்களில் உன்னிப்பாக ஆராய்ந்தது.

பந்து வீசும் போது அவரது முழங்கை வளைவது விதிமுறைக்குட்பட்டு இருப்பதாகவும், அவரது பந்து வீச்சில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கமிட்டியினர் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது பெயர் எச்சரிக்கை பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பந்து வீச்சு சர்ச்சையால் கடந்த 3 ஆட்டங்களில் ஆடாத 32 வயதான நரின் அடுத்த ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து