முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளை நினைத்து உருகிய நடராஜன்

ஞாயிற்றுக்கிழமை, 9 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மகள் குறித்து ஒரு உருக்கமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட செய்தியில், 

“ஹன்விகா.. எங்களது சின்ன தேவதை.. என்னுடைய எல்லாத் திட்டங்களுக்கு இடையே அவள் பிறந்தாள். எதிர்பாரதவிதமாக நான் அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்தேன். இன்று (நேற்று) அவள் பிறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. என்னுடைய எல்லாத்திட்டங்களை தாண்டி நான் அவளுடன் இருக்கிறேன்... நான் அவளுடன் இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கை கணிக்க முடியாததாய் இருக்கிறது. இந்தத் தருணங்கள் விலை மதிக்க முடியாதவை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

__________

முன்னாள் ஹாக்கி வீரர் உயிரிழப்பு

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான எம்கே கவுசிக், கொரோனா பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 66. இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் தங்கம் வென்றது. அந்த அணியில் விளையாடியவர் டெல்லியைச் சேர்ந்த எம்கே கவுசிக் (வயது 66). 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17 ம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 வாரங்களாக கொரோனா தொற்றுடன் போராடி வந்த எம்கே கவுசிக், நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டதாக அவரது மகன் எஹ்சன் தெரிவித்துள்ளார். 

___________

விராட் கோலி குறித்து முகமது ஷமி 

அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார். விராட் கோலி குறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது இந்த இந்திய அணியின் அதிர்ஷ்டம் அல்லது கடின உழைப்பு என்று நீங்கள் கூறலாம். ஆனால், விராட் கோலி எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக இருப்பார். 

மைதானத்தில் விளையாடும்போது முழு சுதந்திரம் அளிப்பார். எங்களுடைய திட்டம் தோற்கும்போது, அவர் மட்டும்தான் ஜம்ப் ஆவார். மாறாக நாங்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக பந்து வீசுவோம். அவர் எப்போதுமே ஆதரவாக இருப்பார் என்றார்.

___________

யூனிஸ் கானின் சாதனை முறியடிப்பு

ஜிம்பாப்வே நாட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர். 2வது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது.  அதில், 2வது நாளில் பாகிஸ்தான் வீரர் அபித் அலி புதிய சாதனை படைத்து உள்ளார்.  டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக இரட்டை சதம் (215) அடித்த அவர், ஜிம்பாப்வே நாட்டில் அதிக ரன்களை சேர்த்த பாகிஸ்தானிய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான யூனிஸ் கான் ஆட்டமிழக்காமல் 200 ரன்களை குவித்தது சாதனையாக இருந்தது.  அதனை 8 ஆண்டுகள் கழித்து அபித் அலி முறியடித்து உள்ளார். கடந்த 1998ம் ஆண்டு முகமது வாசிம், ஹராரேவில் 192 ரன்களை எடுத்ததே அதற்கு முன் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

 

____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து